9.7 C
Scarborough

“மற்றுமொரு வெற்றி”: ட்ரம்பின் வரி விதிப்பு ரத்து குறித்து Doug Ford உற்சாகம்!

Must read

அமெரிக்க ஜனாதிபதி Donald Trump விதித்த உலகளாவிய வரிகளில் பலவற்றை அமெரிக்க உச்ச நீதிமன்றம் (U.S. Supreme Court) ரத்து செய்திருப்பதை, ஒன்டாரியோ பிரீமியர் Doug Ford “மற்றொரு முக்கிய வெற்றி” என வரவேற்றுள்ளார்.

அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்தி கனடா உள்ளிட்ட நாடுகள் மீது Trump விதித்த 35 சதவீத வரிகள் செல்லாது என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

எனினும், வாகனங்கள், உருக்கு, அலுமினியம் மற்றும் வனத்துறை சார்ந்த பொருட்கள் மீதான வரிகள் இன்னும் நீடிப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள Doug Ford, கனடா மீதான அனைத்து வரிகளும் நீக்கப்படும் வரை தனது போராட்டம் தொடரும் எனத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வரிகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் உள்ளூர் பொருளாதாரம் வலுப்படுத்தப்படும் என டொராண்டோ மேயர் Olivia Chow உறுதி அளித்துள்ளார்.

நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு, 10 சதவீத புதிய உலகளாவிய வரியை விதிக்கப் போவதாக Trump அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article