டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள மிரட்டல்கள் மற்றும் போர்நிறுத்த மீறல்கள், இராஜதந்திர உறவுகளுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக ஈரானிய பாராளுமன்ற சபாநாயகர் மொஹமட் பக்கர் காலிபாப் தெரிவித்துள்ளார்.
தமது உத்தியோகபூர்வ எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், அமெரிக்காவின் இந்த அணுகுமுறையினால் இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் தீவிரமடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அழுத்தங்களுக்கு மத்தியில் எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் ஈடுபடப் போவதில்லை என ஈரான் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
பேச்சுவார்த்தை மேசையைச் சரணடைவதற்கான இடமாக மாற்ற வொஷிங்டன் முயற்சிப்பதாக சபாநாயகர் குற்றம் சுமத்தியுள்ளார்.
பதற்றங்கள் மேலும் அதிகரித்தால், போர்க்களத்தில் புதிய மற்றும் நவீன இராணுவ வியூகங்களை வெளிப்படுத்த ஈரான் தயாராக இருப்பதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

