கனடா மிசிசாகா நகரில் இடம்பெற்ற உடைமையைத் திருடல் சம்பவங்களையடுத்து இரண்டு இளைஞர்களை பீல் பிராந்திய காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நவம்பர் 2025 மற்றும் ஜனவரி 2026 மாதங்களில் காவல்துறையினர் 35க்கும் மேற்பட்ட உடைமையைத் திருடல் சம்பவங்களின் அறிக்கைகளைப் பெற்றுள்ளனர். இந்த குற்றச் சம்பவங்களில் 2007 ஆண்டு வெள்ளி நிற அக்யூரா RDX மற்றும் 2009 ஆண்டு ஹூண்டாய் எலான்ட்ரா உள்ளிட்ட பல வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனஎன்பது குறிப்பிடத்தக்கது.
சாரணையின் ஒரு பகுதியாக அதிகாரிகளால் பெப்ரவரி 10-ஆம் தேதி மிஸ்ஸிசோகாவின் மூன்று குடியிருப்புகள் மற்றும் ஒரு வாகனத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களின் வாயிலாக இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். அத்துடன் 50,000 டொலருக்கும் மேற்பட்ட திருட்டு பொருட்கள் மீட்டெடுக்கப்பட்டன. மேற்படி தேடுதல் நடவடிக்கையின் போது ஜாக்கெட்டுகள், காலணிகள், அழகு சாதனப் பொருட்கள் ஆகியவை கைப்பற்றப்படுள்ளமை குறிப்பிடத்தக்கது.

