2.1 C
Scarborough

பெண் ஒருவரை கம்பியால் தாக்கிக்கொன்ற சம்பவம் – விசாரணைகள் ஆரம்பம்!

Must read

கனடா மிசிசாகா நகரில் உள்ள டண்டாஸ் ஸ்ட்ரீட் ஈஸ்ட் (Dundas Street East) மற்றும் டிக்ஸி ரோடு (Dixie Road) சந்திப்புக்குஅருகில் ஒரு பெண்ணை உலோகக் கம்பியால் தாக்கிக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட 58 வயதான கெண்ட் மெக்கெர்ரன் என்ற நபரின் மீதான விசாரணைகள் தற்போது பீல் பிராந்திய காவல் துறையினாரால் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

கடந்த ஜனவரி 30ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை சுமார் 7:40 மணியளவில் மேற்படி கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த காவல் அதிகாரிகள் குற்றம் சாட்டப்பட்ட மெக்கெர்ரனை கண்டறிந்து கைது செய்தனர். அவர்மீது பின்வரும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன:

இரண்டாம் நிலை கொலை (Second Degree Murder)

கடுமையான தாக்குதல் (Aggravated Assault)

கொலைச் சம்பவத்திற்கு முன்பு குற்றஞ்சாட்டப்பட்ட நபருடன் தொடர்பு கொண்டிருந்ததாக நம்பப்படும் மேலும் ஒருவரை (ஆண்) அடையாளம் காண பீல் பிராந்திய காவல் துறை முயற்சித்து வருகிறது.

மேலும், குற்றஞ்சாட்டப்பட்ட நபரால் மேலும் வேறு பொதுமக்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகம் எழுந்துள்ளது. சம்பவங்களுக்கு முன் குற்றஞ்சாட்டப்பட்ட நபரை கண்டவர்கள், சம்பவத்தின் சாட்சிகள், அல்லது டாஷ்-கேம் (dash camera) காட்சிகள் வைத்திருப்பவர்கள், தாமே பாதிக்கப்பட்டவர்கள் என யாராக இருந்தாலும், 905-453-2121 (உள் எண்: 3205) என்ற எண்ணில் கொலைப்பிரிவை தொடர்புகொள்ளுமாறு பொதுமக்களிடம் பீல் பிராந்திய காவல்துறை அறிவித்துள்ளது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article