கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள டம்ப்ளர் ரிட்ஜ் பகுதியில் அமைந்துள்ள மேல்நிலைப் பாடசாலையில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் வகையில், பிராம்ப்டன் நகர மன்றத்தில் ஏற்றப்பட்ட கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட குடும்பங்கள், நண்பர்கள் மற்றும் சமூக உறுப்பினர்களுக்கு எங்களின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம் என பிராம்ப்டன் மாநகராட்சி தெரிவித்துள்ளது.
கனடா முழுவதும் அனுஷ்டித்துக் கொண்டிருக்கும் மேற்படி பொதுத் துயரத்தில் பிராம்ப்டன் நகரமும் இணைந்து கொள்கின்றது என பிராம்ப்டன் மாநகராட்சி மேலும் தெரிவித்துள்ளது.

