WestJet விமான நிறுவனத்தில் பணியாற்றிய பெண் ஊழியர்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வழக்கில், 4.5 மில்லியன் டாலர் இழப்பீட்டுத் தொகையை வழங்க முன்மொழியப்பட்ட ஒப்பந்தம் குறித்து பிரிட்டிஷ் கொலம்பியா (B.C.) நீதிமன்றம் விரைவில் தீர்ப்பளிக்க உள்ளது.
சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு, முன்னாள் விமானப் பணிப்பெண் மண்டலேனா லூயிஸ் (Mandalena Lewis) இந்த தொடுத்திருதார்.
இந்த வழக்கில், 2010 ஆம் ஆண்டு ஹவாய் (Hawaii) பயணத்தின் போது விமானி ஒருவரால் தான் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதாகவும், அதற்கு WestJet நிறுவனம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியிருந்தார்.
பின்னர், இதேபோன்ற முறைப்பாடுகளுடன் பல பெண்கள் முன்வந்ததையடுத்து, இது ஒரு கூட்டுப் போராட்டமாக (Class Action) மாறியது.
தற்போது எட்டப்பட்டுள்ள ஒப்பந்தத்தின்படி, 3,458 பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு தலா 700 முதல் 1,000 டாலர்கள் வரை மட்டுமே கிடைக்கும் என்பதால், எட்டு ஊழியர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது தங்களை அவமதிக்கும் செயல் என்றும், நிறுவனம் தனது தவறை ஒப்புக்கொண்டு ஊழியர்களுக்கு முறையான பாதுகாப்பு மற்றும் சிகிச்சைக்கான உதவிகளை வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனினும், இந்தக் குற்றச்சாட்டுகளை WestJet நிறுவனம் இதுவரை ஒப்புக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

