5.6 C
Scarborough

பந்துவீச்சில் மிரட்டிய ஈஷான் மலிங்க!

Must read

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 31 ஆவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 47 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஹைதராபாத்தில் நடைபெற்ற குறித்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கெப்பிட்டல்ஸ் ஆகிய அணிகள் மோதின.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகளை இழந்து 242 ஓட்டங்களைக் குவித்தது.

துடுப்பாட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் சார்பில் அபிஷேக் சர்மா 135 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றுக்கொடுத்தார்.

இந்தநிலையில் 243 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 195 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியைத் தழுவியது.

துடுப்பாட்டத்தில் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியின் சார்பில் நிதிஸ் ராணா 57 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் சார்பில் ஈஷான் மலிங்க 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இந்தநிலையில் குறித்த வெற்றியின் மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article