6.3 C
Scarborough

துப்பாக்கிச் சூட்டு சம்பவம்: உலக தலைவர்கள் இரங்கல்!

Must read

கனடாவில் பாடசாலையொன்றுக்குள் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் பலியாகியுள்ளனர்.

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம் டம்ளர் ரிட்ஜ் பகுதியில் மேல்நிலை பாடசாலை இயங்கிவருகின்றது.

அங்கு 7 முதல் 12-ம் வகுப்பு வரை 175 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்த நிலையில் பாடசாலைக்குள் மர்ம நபர் துப்பாக்கியுடன் நுழைந்தார். அந்த நபர் பாடசாலைக்குள் இருந்தவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினார்.

இதனால் மாணவர்கள், ஆசிரியர்கள் அலறியடித்து ஓடினார்கள். தாக்குதலில் பலர் மீது குண்டு பாய்ந்ததில் அவர்கள் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தனர்.

தகவல் அறிந்ததும் பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் பாடசாலைக்குள் சென்று தாக்குதல் நடத்தியவரை தேடினர்.

அப்போது துப்பாக்கிசூட்டில் 9 பேர் பலியாகி இருப்பது தெரியவந்தது. 25 பேர் காயம் அடைந்திருந்தனர்.

அவர்களை மீட்டு வைத்தியசாலையில் சேர்த்தனர். பாடசாலைக்குள் இருந்த 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஊழியர்களை பொலிஸார் பாதுகாப்பாக வெளியேற்றினர்.

இதற்கிடையே துப்பாக்கி சூடு நடத்திய நபர் இறந்துகிடந்தார். அவர் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார்; தெரிவித்தனர்.

அதேவேளையில் தாக்குதல் நடத்தியவர் ஒரு பெண் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் இத்தாக்குதலில் மற்றொரு நபரும் ஈடுபட்டதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article