Toronto நகரின் Jane – Finch பகுதிக்கு அருகிலுள்ள Needle Firway இல் உள்ள உயரமான அடுக்குமாடி குடியிருப்பில் செவ்வாய்க்கிழமை மதியம் ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
12-வது மாடியில் உள்ள ஒரு குடியிருப்பில் புகை வெளியேறுவதைக் கண்டவர்கள் உடனடியாக அவசர சேவைகளுக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.
அதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த Toronto Fire தீயணைப்பு வீரர்கள், கடும் போராட்டத்திற்குப் பிறகு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்து, உள்ளே சிக்கியிருந்த ஒருவரை மீட்டனர்.
இருப்பினும் மருத்துவக் குழுவினர் மீட்கப்பட்ட நபர் ஏற்கனவே உயிரிழந்திருந்தார் என்பதை உறுதிப்படுத்தினர்.
உயிரிழந்தவரின் வயது அல்லது பாலினம் குறித்த தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
தற்போது Toronto Police மற்றும் Ontario Fire Marshal அதிகாரிகள் இணைந்து இந்தத் தீ விபத்திற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

