கத்தோலிக்கரான பிரதமர் மார்க் கார்னி அவர்கள் பொதுத் தேர்தலின் இரண்டு நாட்களுக்கு முன்னைய தினமான ஏப்ரல் 26 அன்று நடைபெற்ற பாப்பரசர் பிரான்ஸின் இறுதிச்சடங்கின் போது கலந்து கொண்டிக்கவில்லை. ஆயினும் ஞாயிற்றுக் கிழமை இத்தாலி செல்லும் பிரதமர் பாப்பரசர் லியோவின் பதவியேற்பு திருப்பலி நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளார்.
இந்த பயணத்தின் போது கனேடிய பிரதமர், இத்தாலியின் பிரதமர் ஜியோர்ஜியா மெலொனி உள்ளிட்ட பலருடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் கார்னியுடன் Assembly of First Nations National தலைவர் Cindy Woodhouse Nepinak, Métis National Council தலைவர் மற்றும் பல நாடாளுமன்ற உறுப்பினர்களும், செனட்டர்களும் பயணம் செய்யவுள்ளனர்.
வெள்ளிக்கிழமை காலை வத்திக்கானால் வெளியிடப்பட்ட இராஜதந்திரிகளுகான உரையில் பாப்பரசர் லியோ அமைதி, நீதி மற்றும் உண்மையின் மூலம் பூமியில் உள்ள அனைத்து தனிநபர்களையும் அனைத்து மக்களையும் சென்றடையவும் அரவணைக்கவும் திருச்சபையின் முயற்சிகளை மீண்டும் உறுதிப்படுத்தினார். அத்துடன் மதங்களும், மதங்களுக்கு இடையேயான உரையாடலும் அமைதிச் சூழலை வளர்ப்பதற்கு அடிப்படை பங்களிப்பை அளிக்கும் என்று நம்புவதாகவும். இதற்கு இயற்கையாகவே ஒவ்வொரு நாட்டிலும் மத சுதந்திரத்திற்கு முழு மரியாதை தேவைப்படுகிறது, ஏனெனில் மத அனுபவம் மனிதனின் இன்றியமையாத பரிமாணமாகும் என்றும் பாப்பரசர் லியோ கூறினார்.
இந்நிகழ்வில் புதிய போப்பான Leo, St. Peter நினைவாக ஓர் தங்கத்தால் செய்யப்பட்ட மீனவர் மோதிரத்தைப் பெறுவார். அத்துடன் புதிய போப்பின் பெயர் பொறிக்கப்பட்ட boat ஒன்றையும் பெற்றுக்கொள்வார் இது அவர் இறக்கும் போது அல்லது பதவி விலகும் போது அழிக்கப்படும்.
இவற்றுடன் அவர் தனது தோள்களில் அணியும் ஒரு சிறிய ஆட்டுக்குட்டி கம்பளித் துண்டும் அவருக்குப் பரிசாக வழங்கப்படும் இது தேவாலய மந்தையின் மேய்ப்பராக அவரது பங்கின் அடையாளமாகும். இத்திருப்பலி நிகழ்வில் 150,000 முதல் 200,000 பேர் வரை கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.