“அண்டை நாடான அமெரிக்கா தற்போது ஒரு பகைமை நாடாக மாறிவிட்டது” என, முன்னாள் பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் எச்சரித்துள்ளார்.
ஓட்டவாவில் நடைபெற்ற தனது ஆட்சியின் 20-வது ஆண்டு விழாவில், கலந்துகொண்டு உரையாற்றிய போதே, அவர் இக்கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் வர்த்தக ஒப்பந்தங்களை மீறுவதோடு, கனடாவின் தனித்தன்மையையே கேள்விக்குள்ளாக்குகிறார் என ஹார்ப்பர் குற்றம் சாட்டினார்.
அமெரிக்காவின் இந்த முறையற்ற தாக்குதலுக்குக் கனடா ஒரு “வலிமையான பதிலடி” கொடுக்க வேண்டும் என்றும், அமெரிக்கப் பொருட்கள் மீது பதிலுக்கு வரி விதிக்கத் தயங்கக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
அருகில் இருக்கிறது என்பதற்காகவே ஒரு நாட்டை மட்டும் நாம் 100% சார்ந்திருப்பது அறிவீனம் என்று கூறிய முன்னாள் பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர், ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் நாம் புதிய வர்த்தகத் தொடர்புகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கனடாவை அமெரிக்காவின் 51-வது மாநிலமாக மாற்றுவது போன்ற டிரம்பின் பேச்சுகளைச் சுட்டிக்காட்டிய அவர், “நமது சுதந்திரத்தைப் பாதுகாக்கப் பொருளாதார ரீதியாகப் பின்னடைவு ஏற்பட்டாலும், அதனை நாம் ஒரு தியாகமாக ஏற்றுக்கொண்டு நாட்டைப் பாதுகாக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

