4.7 C
Scarborough

கார் உற்பத்தியில் அமெரிக்க நிறுவனங்களின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி!

Must read

கனடாவின் கார் உற்பத்தித் துறையில் கடந்த பத்து ஆண்டுகளாக நிலவி வந்த அமெரிக்க நிறுவனங்களின் ஆதிக்கம் முடிவுக்கு வந்துள்ளதாக ‘ட்ரில்லியம் நெட்வொர்க்’ (Trillium Network) வெளியிட்டுள்ள புதிய ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.

தற்போது ஜப்பானிய நிறுவனங்கள் அந்த இடத்தைப் பிடித்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கனடாவின் கார் உற்பத்தியில் ‘டெட்ராய்ட் த்ரீ’ (Detroit Three) எனப்படும் ஃபோர்டு, ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் ஸ்டெல்லாண்டிஸ் ஆகிய அமெரிக்க நிறுவனங்களின் பங்கு பெருமளவு குறைந்துள்ளது.

2016-ஆம் ஆண்டில் கனடாவில் உற்பத்தியான கார்களில் 56 சதவீதத்தை அமெரிக்க நிறுவனங்கள் தயாரித்தன.

2025 ஆம் ஆண்டில் இது வெறும் 23 சதவீதமாகச் சரிந்துள்ளது.

அதேசமயம், ஜப்பானின் டொயோட்டா மற்றும் ஹோண்டா நிறுவனங்களின் உற்பத்தித் திறன் 44 சதவீதத்திலிருந்து 77 சதவீதமாக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article