3 C
Scarborough

கனேடியர்களை நேசிக்கிறேன் – அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின்!

Must read

அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப், சமீபத்தில் அமெரிக்காவுக்குச் சென்ற கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மூலமாக கனேடியர்களுக்கு செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.

கனடாவின் கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான ஜமில் ஜிவானி (Jamil Jivani), சமீபத்தில் அமெரிக்கா சென்றிருந்தார்.

கனடா அமெரிக்க உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் தனிப்பட்ட முறையில் அவர் அமெரிக்கா சென்றிருந்தார்.

அப்போது, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், கனேடிய மக்களுடன் பகிர்ந்துகொள்ளும்படி தன்னிடம் ஒரு செய்தியைக் கொடுத்ததாகத் தெரிவித்துள்ளார் ஜிவானி.

அது குறித்து சமூக ஊடகமான எக்ஸில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ள ஜிவானி, ’வெள்ளை மாளிகை மற்றும் மாகாணத் துறையுடன் பயனுள்ள சந்திப்புகள் இன்று நிகழ்ந்தன.

அமெரிக்க ஜனாதிபதி என்னிடம் ஒரு செய்தியைக் கொடுத்து அதை கனேடிய மக்களுக்குக் கொடுக்குமாறு கூறினார்’.

’நான் கனேடியர்களை நேசிக்கிறேன் என்று அவர்களிடம் கூறுங்கள், பிறகு நான் அவர்களிடம் பேச நிறைய விடயங்கள் உள்ளன’ என்று ட்ரம்ப் தன்னிடம் கூறியதாக ஜிவானி தெரிவித்துள்ளார்.

ஜிவானி, அமெரிக்க துணை ஜனாதிபதியான JD வேன்ஸின் நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article