கனடா மானிடோபாவில் தவறாக பென்டனில் (fentanyl) மற்றும் மற்றொரு மருந்தை வழங்கி, நோயாளிக்கு இதயத் துடிப்பு நிற்கச் செய்ததாக ஒப்புக்கொண்ட மானிடோபா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு செவிலியரின் தொழில்முறை உரிமம் ரத்து செய்யப்பட்டு, அவருக்கு 10,000 டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக உரிமம் வழங்கும் அமைப்பு தெரிவித்துள்ளது.
“மிகவும் தகுதி இல்லாத அல்லது கடுமையான அலட்சியத்துடன் செயல்பட்ட” அந்த செவிலியர், கடந்த ஆண்டு இலைக்காலத்தில் நிகழ்ந்த சம்பவத்தில் தவறான முறையில் மருந்துகளை வழங்கியதாக ஒப்புக்கொண்டதன் அடிப்படையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மானிடோபா பதிவு செய்யப்பட்ட செவிலியர்கள் கல்லூரி தெரிவித்தது.
குறித்த தவறைச் செய்த தாதி நிபாபென் படேல் (Nipaben Patel) நவம்பர் மாதத்தில் நடைபெற்ற விசாரணையில் நான்கு குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார் என்று, வியாழக்கிழமை வெளியிடப்பட்ட தீர்மானம் கூறுகிறது. ஐந்தாவது குற்றச்சாட்டு திரும்பப் பெறப்பட்டது.
2024 நவம்பர் மாதத்தில், மருத்துவரின் முன் அனுமதி பெறாமல் மானிடோபாவின் லின் லேக் பகுதியில் ஒரு நோயாளிக்கு பென்டனில் மற்றும் சக்கினில்கோலின் (succinylcholine) ஆகிய மருந்துகளை தாதி நிபாபென் படேல் வழங்கியுள்ளார்.

