3 C
Scarborough

கனடா அமைச்சருடன் இருதரப்பு ஒத்துழைப்பு ஜெய்சங்கர் ஆலோசனை!

Must read

அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி. நகரில் முக்கிய தாதுக்கள் தொடர்பான அமைச்சர்கள் மாநாட்டில் பல நாடுகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில், இந்தியா சார்பில் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டார்.

இதுபற்றி குறிப்பிட்ட அவர், கனடா வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்துடன் நடந்த சந்திப்பின்போது, இரண்டு நாடுகளின் இருதரப்பு ஒத்துழைப்பு பற்றி பேசினேன். அவருடனான சந்திப்பு சிறப்பாக இருந்தது என குறிப்பிட்டார்.

நம்முடைய நாடுகளின் உறவுகளை முன்னோக்கி எடுத்து செல்வது பற்றி இருவரும் பேசினோம் என்றும் கூறினார்.

இதேபோன்று, பெரு நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஹியூகோ டி ஜெலாவையும் நேரில் சந்தித்து பேசினேன். அப்போது, இரு நாடுகள் தொடர்பான நம்முடைய ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பாக பேசினேன் என தெரிவித்து உள்ளார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article