கனடாவின் British Columbia மாகாணத்தில், குறிப்பாக Vancouver மற்றும் Surrey நகரங்களில் வசிப்பவர்களையும் வணிகர்களையும் மிரட்டிப் பணம் பறிக்கும் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன.
இதுவரை இவ்வாறான முறைப்பாடுகள் பதிவாகாத Vancouver நகரில், தற்போது முதன்முறையாக 4 மிரட்டிப் பணம் பறித்தல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக (VPD) வன்கூவர் பொலிஸ் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.
இது தொடர்பாகச் சோதனைகள் நடத்தப்பட்டுச் சில கைதுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இவ்வகை குற்றங்களின் மையப்புள்ளியாகக் கருதப்படும் Surrey நகரில், இந்த ஆண்டின் பிப்ரவரி 16-ஆம் தேதி வரை மட்டும் 53 குற்றச்சாட்டுக்கள் பதிவாகியுள்ளன.
இதில் 11 துப்பாக்கிச் சூடு மற்றும் 2 தீவைப்புச் சம்பவங்களும் அடங்கும்.
பிரதமர் Mark Carney, Surrey நகருக்கு நேரில் சென்று உயர்மட்டப் போலிஸ் அதிகாரிகளைச் சந்தித்து நிலைமையை ஆய்வு செய்தார்.
குற்றவாளிகள் தப்பிப்பதைத் தடுக்கக் குடிவரவுச் சட்டங்களை (Immigration Laws) கடுமையாக்குவது மற்றும் குற்றவியல் சட்டத்தில் 80 திருத்தங்களைக் கொண்டுவருவது குறித்து அவர் ஆலோசித்தார்.

