5.2 C
Scarborough

கனடாவில் அவசர இரத்தத் தேவைகள் அதிகரிப்பு

Must read

 கனடா முழுவதும் ரத்தம் மற்றும் பிளாஸ்மா தானங்களுக்கு அவசரத் தேவை ஏற்பட்டுள்ளதாக கனடிய இரத்த வங்கி அறிவித்துள்ளது.

குளிர்கால காலநிலை மற்றும் பருவ நோய்கள் காரணமாக ரத்த சேகரிப்பு பாதிக்கப்பட்டுள்ளது என அந்த அமைப்பின் வணிக மேம்பாட்டு மேலாளர் கேட்டி பியா தெரிவித்துள்ளார்.

இதன் தாக்கம் உள்ளூர் ரத்த தான மையங்களில் பெரிதும் உணரப்படுகிறது. “கிச்சனர்–வாட்டர்லூ பகுதியில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட முன்பதிவு நேரங்கள் காலியாக உள்ளன,” என அவர் கூறினார்.

குளிரால் சாலைகள் பனியால் வழுக்கலாக இருப்பதும், விபத்துகள் அதிகரிப்பதும் மருத்துவமனைகளில் ரத்தத் தேவையை உயர்த்தியுள்ளது.

அதே சமயம், பலர் முன்பதிவுகளை ரத்து செய்வதோ, நேரத்திற்கு வராததோ காரணமாக ரத்த சேகரிப்பு குறைந்துள்ளது. முன்பதிவுகள் குறைந்துள்ளன.

மேலும் பனிச்சாலைகள் காரணமாக விபத்துகள் அதிகரிக்கின்றன.

இதனால் மருத்துவமனைகளுக்கு அதிக ரத்தம் தேவைப்படுகிறது, என பியா விளக்கினார்.

எந்த ரத்த வகையினருக்கும் கொடுக்கக்கூடிய O-நெகட்டிவ் ரத்தம் மிகவும் அவசியமாக தேவைப்படுவதாக அமைப்பு தெரிவித்துள்ளது.

தகுதியுள்ள அனைவரும் வந்து ரத்த தானம் செய்ய வேண்டும். அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்ய இது அவசியம் என்று பியா கேட்டுக்கொண்டார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article