கனடாவின் மத்திய அல்பெர்டாவில் உள்ள ஒரு நகரம், கடன் சுமையால் மூழ்கி தனது எதிர்காலம் குறித்து உறுதியற்ற நிலையில் உள்ளது.
நகரத்தை கலைத்து, ஸ்டர்ஜன் கவுண்டியில் இணைக்கும் வாய்ப்பை நகர நிர்வாக அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
ஸ்டர்ஜன் கவுண்டியின் புவியியல் எல்லைக்குள் அமைந்துள்ள கிபன்ஸ் நகரம், தொடர்ச்சியான தவறான நிதி முடிவுகளால் தனது எதிர்காலத்தை இழந்த நிலையில் திவாலாவதற்குத் துரிதமாக நகர்கிறது என நகரத்தின் மேயரும் நகரசபையும் தெரிவிக்கின்றனர்.
இடைநிலை முதன்மை நிர்வாக அதிகாரி டிம் டுஹாமெல் உள்ளிட்ட நகர நிர்வாக அதிகாரிகள், நகரத்தின் நிதிநிலை குறித்த தகவல்களை செவ்வாய்க்கிழமை காலை ஸ்டர்ஜன் கவுண்டி மேயரும் கவுன்சிலுக்கும் வழங்கினர்.
“தற்போது நாம் மிக மோசமான சூழ்நிலையில் இருக்கிறோம்; இது முன்பு இல்லாத ஒன்று,” என கிபன்ஸ் மேயர் ரிக் ஹெண்டர்சன் தெரிவித்தார்.
“இந்த பிரச்சினை ஆயிரங்கள் அல்லது இலட்சங்களில் அல்ல; இது கோடிகளில் உள்ளது,” என நகரத்தின் நிதிநிலையைப் பற்றி மேயருடன் இணைந்து விளக்கமளித்த டுஹாமெல் கூறினார்.
பல ஆண்டுகளாக செயல்பாட்டு சமநிலையின்மை, சேமிப்பு நிதிகளின் குறைவு மற்றும் செயல்பாட்டு கடன்களில் அதிகரித்த சார்பு ஆகிய காரணங்களால் இந்த பிரச்சினைகள் உருவானதாக அவர் ஸ்டர்ஜன் கவுண்டி அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
நகரத்தின் நிதி நெருக்கடிக்கு முக்கிய காரணமாக குறிப்பிடப்படும் திட்டங்களில் ஒன்று ‘ஹார்ட்லாண்ட் ஸ்டேஷன்’ வணிக வணிக வளாகம் ஆகும்.
குறுகிய கால நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, அல்பெர்டா நகராட்சி விவகார அமைச்சகத்துடன் தொடர்ந்து கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாக டுஹாமெல் தெரிவித்தார்.
அந்த கலந்துரையாடல்களின் விளைவாக, 500,000 டாலர் மதிப்பிலான ‘அல்பெர்டா சமூக கூட்டாண்மை’ மானியம் வழங்கப்பட்டதுடன், மாகாண அரசுக்கு செலுத்த வேண்டிய தொகைகளுக்கான ஒத்திவைப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

