திங்கட்கிழமை நடைபெற்ற விறுவிறுப்பான ‘Big Air’ இறுதிப் போட்டியில், 24 வயதான கனடாவின் Megan Oldham, சீனாவின் நட்சத்திர வீராங்கனை Eileen Gu-வை (179 புள்ளிகள்) வீழ்த்தி முதலிடத்தைப் பிடித்தார்.
மெகன் தனது சிறந்த இரண்டு சுற்றுகளில் மொத்தமாக 180.75 புள்ளிகளைப் பெற்று தங்கப் பதக்கத்தை உறுதி செய்தார்.
மெகன் ஓல்ட்ஹாம் இந்த ஒலிம்பிக்கில் வெல்லும் இரண்டாவது பதக்கம் இதுவாகும். ஏற்கனவே பிப்ரவரி 9 அன்று ‘Slopestyle’ பிரிவில் அவர் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார்.
கடும் பனிப்பொழிவு மற்றும் காற்று காரணமாக போட்டி 75 நிமிடங்கள் தாமதமாகத் தொடங்கியது. இருப்பினும், மன உறுதியுடன் விளையாடி அவர் இந்த வெற்றியைப் பதிவு செய்தார்.
இந்தத் தங்கத்துடன், நடப்பு ஒலிம்பிக்கில் கனடா இதுவரை 11 பதக்கங்களை வென்றுள்ளது. Mikaël Kingsbury மற்றும் Courtney Sarault ஆகியோருக்குப் பிறகு, இந்த ஒலிம்பிக்கில் ஒன்றுக்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்ற மூன்றாவது கனேடியராக மெகன் திகழ்கிறார்.
கடந்த முறை பீஜிங் ஒலிம்பிக்கில் பதக்கத்தைத் தவறவிட்ட மெகன், இந்த முறை தனது கனவை நனவாக்கி கனடாவிற்குப் பெருமை சேர்த்துள்ளார்.

