மத்திய கிழக்கில் ஏற்பட்ட புதிய பதற்ற நிலைமைக்கு மத்தியில் அமெரிக்கா நேற்று இரவு ஈரான் (Iran) மீது மேற்கொண்ட கடுமையான தாக்குதல்களுக்கு பின்னர், கனடாவின் பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) இரு தரப்புகளும் உடனடியாக சமாதான பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
“ஈரானின் அணுசக்தி திட்டம் என்பது உலகப் பாதுகாப்பிற்கு மிகப் பெரிய அபாயமாக இருக்கிறது. ஈரான் அணுகுண்டை உருவாக்க அனுமதிக்கக்கூடாது” என்று தனது X தளத்திலும் பதிவிட்டுருந்தார்.
அந்த அபாயத்தை குறைக்கவே அமெரிக்கா தாக்குதல் நடத்தியதென சுட்டிக்காட்டியுள்ள அவர், மத்திய கிழக்கின் பதற்ற நிலை உலகில் நிலையற்ற தன்மையை உருவாக்க இடமளிக்காமல், நிலைத்தன்மையை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதையும் பிரதமர் கார்னி வலியுறுத்தினார்.