3.9 C
Scarborough

இன்னும் 26 வருடங்களில் கனடா எதிர்கொள்ளபோகும் நெருக்கடி!

Must read

தங்களது அதிகாரபூர்வ திட்டத்தைப் புதுப்பிக்கும் நோக்கில், Ottawa நகரம் 2051-ஆம் ஆண்டு வரையிலான புதிய சனத்தொகை கணிப்புகளை வெளியிட்டுள்ளது.

​நகரத்திற்காக Hemson Consulting தயாரித்து வழங்கிய அறிக்கையின்படி, 2051-ஆம் ஆண்டிற்குள் சனத்தொகை 1.68 மில்லியனை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 2024-ஆம் ஆண்டிலிருந்து சுமார் 530,000 குடியிருப்பாளர்களின் வளர்ச்சியாகும்.

கனடாவின் சனத்தொகை வளர்ச்சியானது குறிப்பாக சர்வதேச குடிவரவால் ஏற்படுகிறது. சனத்தொகை முதிர்ச்சியடைவதால் வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது. இதனடிப்படையில் நோக்கும் போது காலப்போக்கில் இயற்கையான பிறப்பு வீத அதிகரிப்பின் பங்கு குறைவாகவே இருக்கும் என்று அந்த நகர அறிக்கை கூறுகிறது.

​அடுத்த 25 ஆண்டுகளில் Ontario வில் மிக வேகமாக வளரும் உயர்மட்ட நகர சபையாக Ottawa இருக்கும் என்று நிதி அமைச்சகம் கணித்துள்ளது.

அனைத்து வயதுப் பிரிவினரும் அதிகரிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், பணியாற்றும் வயதிலுள்ள வயது வந்தவர்கள் மற்றும் முதியவர்கள் பிரிவிலேயே மிகப்பெரிய வளர்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது. முதியவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதானது, அவர்களுக்கு கிடைக்கக்கூடிய வீட்டுவசதி, சுகாதாரம், போக்குவரத்து மற்றும் சமூக சேவைகளின் தேவையை வலியுறுத்துகிறது.

எனினும், நகரின் வேலைவாய்ப்பு குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2051-ஆம் ஆண்டிற்குள் இது 994,600 வேலைவாய்ப்புகளை எட்டும். இது 2024-ஆம் ஆண்டிலிருந்து 325,000 வேலைவாய்ப்புகளின் உயர்வாகும்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article