13.7 C
Scarborough

ஆஸ்திரேலிய இராணுவ வரலாற்றில் முதல்முறையாக பெண் தளபதி நியமனம்

Must read

ஆஸ்தரேலிய பாதுகாப்புப் படையில் மேற்கொள்ளப்பட்டுள்ள தலைமைத்துவ மாற்றத்தின் ஒரு பகுதியாக, அந்நாட்டு வரலாற்றிலேயே முதல்முறையாகஇராணுவத்தை வழிநடத்த ஒரு பெண் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது கூட்டுத் திறன் பிரிவின் தலைவராக இருக்கும் லெப்டினன்ட் ஜெனரல் சூசன் கோயில் (Susan Coyle), வரும் ஜூலை மாதம் இராணுவத் தளபதியாகப் பொறுப்பேற்பார் என்று அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் தற்போதைய தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சைமன் ஸ்டூவர்ட்டுக்குப் பதிலாக நியமிக்கப்படவுள்ளார்.

ஆஸ்திரேலிய இராணுவத்தில் பெண் அதிகாரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், இராணுவத்திற்குள் நிலவும் பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் பாகுபாடுகள் குறித்த குற்றச்சாட்டுகளைக் களைந்து மாற்றத்தை ஏற்படுத்தவும் முயற்சிக்கும் ஒரு சூழலில் இந்த நியமனம் நிகழ்ந்துள்ளது.

இது குறித்து கருத்துத் தெரிவித்த பிரதமர் அந்தோணி அல்பானீஸ், “எதிர்வரும் ஜூலை மாதம் முதல், ஆஸ்திரேலிய இராணுவத்தின் 125 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறையாக ஒரு பெண் இராணுவத் தளபதியாகப் பணியாற்றுவார்” என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article