அமெரிக்காவுடனான பழைய உறவு முறிந்துவிட்டது என அமெரிக்கா ஜனாதிபதி ட்ரம்பின் வரிகளுக்கு பதிலளிக்கும் விதமாக கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இவ்வாரம் நடைமுறைக்கு வரும் வகையில் வாகன இறக்குமதிக்கு 25 சதவீத வரியை அறிவித்தது.
இதற்கு கனடா பொருட்களுக்கு 25 சதவீத வரியையும், சீனா பொருட்களுக்கு 10 சதவீத வரியையும் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் கனடாவின் பிரதமர் தெரிவித்துள்ளதாவது, அமெரிக்காவின் வரிகள் நியாயமற்றவை. ஏற்கனவே உள்ள வர்த்தக ஒப்பந்தங்களை மீறுவதாகும். அமெரிக்காவுடனான பழைய உறவு முடிந்துவிட்டது.
அமெரிக்கா இனி நம்பகமான கூட்டாளி இல்லை. பேச்சுவார்த்தைகள் மூலம் சில நம்பிக்கையை மீட்டெடுக்க முடியும். கனடாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான ஆழமான பொருளாதார, பாதுகாப்பு மற்றும் இராணுவ உறவுகளின் சகாப்தம் முடிந்து விட்டது.
கனடாவை பலவீனப்படுத்த, நம்மை சோர்வடையச் செய்ய, அமெரிக்கா நம்மை சொந்தமாக்கிக் கொள்ளும் வகையில் பல முயற்சிகள் செய்கிறது. இதை நான் நிராகரிக்கிறேன். அது ஒரு போதும் நடக்காது. சமீபத்திய வரிகளுக்கு எதிராக எங்களது பொருளாதாரத்தை வலுப்படுத்துவோம். வரி விதிப்பை எதிர்த்து போராடுவோம் எனத் தெரிவித்துள்ளார்.