ஒட்டாவா, டொரோண்டோ மற்றும் மான்ட்ரியல் நகரங்களின் இசை உலகில் பல தசாப்தங்களாக முக்கியமான நிறுவனமாக விளங்கிய ஸ்டீவ்ஸ் மியூசிக், விரைவில் அதன் பெரும்பாலான கடைகளை மூடவுள்ளது.
எதிர்வரும் சனிக்கிழமை, அதன் ஐந்து கிளைகளிலும் உள்ள பொருட்களை முழுமையாக விற்பனை செய்து முடிக்கும் (liquidation) நடவடிக்கையை தொடங்குவதாக அந்த நிறுவனம் அறிவித்தது.
ஒட்டாவா கிளை மேலாளரின் தகவலின்படி, சேன்-காதரின் தெருவில் (rue Sainte-Catherine) உள்ள கிளையைத் தவிர, மற்ற அனைத்து கிளைகளையும் மூடுவதுதான் திட்டமாகும்.
“இதனை நான் ஒரு வகையில் அமைதியுடன் ஏற்றுக்கொள்கிறேன். தினசரி பணிகளில் ஈடுபட்டபோது, சந்தை போக்குகளையும் எதிர்கால நிலவரங்களையும் நாம் முன்னமே உணர்ந்துகொண்டிருந்தோம்,” என்று ஒட்டாவா மற்றும் மொன்ட்ரியல் கிளைகளில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய டேன் சோவே தெரிவித்தார்.
“கலைஞர்களின் உலகம் இயற்கையாகவே கடினமானது. அதற்கு மேலாக கலைஞர்களுக்கு வழங்கப்படும் ஆதரவுகளை நாம் மேலும் குறைத்து வருகிறோம்” என்றும் “இதன் விளைவாக பெரிய நிறுவனங்களே அதிக வணிகத்தைப் பெறுகின்றன; நடுத்தர மற்றும் சிறிய நிறுவனங்கள் கடுமையாகப் போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றன என்றும் அவர் மேலும் கூறினார்.

