சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை இன்று சனிக்கிழமை (05) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைத்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி, 12.5 கிலோகிராம் எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 100 ரூபாவினால் குறைக்கப்பட்டு, 4,365 ரூபாவாக புதிய விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், 5 கிலோகிராம் எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 42 ரூபாவினால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 1,750 ரூபாவாக மாற்றமடைந்துள்ளது.
அதேபோன்று, 2.3 கிலோகிராம் எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டு, புதிய விலையாக 815 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பு மாவட்டத்திற்குட்பட்ட வகையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த புதிய விலை திருத்தமானது, தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் நுகர்வோருக்கு குறிப்பிடத்தக்க நிவாரணத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக லிட்ரோ எரிவாயு லங்கா நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
