டொராண்டோவின் கிழக்கு பகுதியில் முதியவர் ஒருவரை பலவந்தமாக காரில் ஏற்றி கடத்தி, அவரது பணப்பையைத் திருடிய பெண் ஒருவரை டொராண்டோ பொலிஸார் (Toronto Police) தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
கடந்த பெப்ரவரி 10 ஆம் திகதி, Victoria Park Avenue மற்றும் St. Clair Avenue East பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த முதியவரை வழிமறித்த பெண், அவரைத் தனது காரின் உட்புறமாகத் தள்ளி கடத்திச் சென்றுள்ளார்.
பின்னர் ஒரு வாகன நிறுத்துமிடத்தில் வைத்து முதியவரின் விரலில் மோதிரம் ஒன்றை வலுக்கட்டாயமாக அணிவித்து, அவரது பணப்பையைத் திருடிக்கொண்டு அவரை இறக்கிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.
இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய பெண் 38 வயதான Mirabela Ene என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் மீது ஆட்கடத்தல் (Forcible confinement), தாக்குதல், திருட்டு மற்றும் மோசடி ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் பொலிஸார் பிடியாணை பிறப்பித்துள்ளனர்.
கருப்பு நிற SUV ரக வாகனத்தில் தப்பிய இவரைக் கண்டால் தகவல் தருமாறு பொலிசார் பொதுமக்களிட் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

