2.1 C
Scarborough

மார்ச்சில் இந்தியா செல்கிறார் பிரதமர்!

Must read

அமெரிக்க அதிபர் Donald Trump கனடா மீது வரிகளை விதித்ததைத் தொடர்ந்து, கனடாவின் முக்கிய வர்த்தக பங்காளியான அமெரிக்காவிற்கு அப்பால் அதன் கூட்டணிகளைப் பன்முகப்படுத்த கனேடியப் பிரதமர் Mark Carney தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

​இதன் ஒரு பகுதியாக, விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தத்திற்கான கட்டமைப்பில் இந்தியப் பிரதமர் Narendra Modi உடன் இணைந்து பணியாற்றுவதற்காக, Mark Carney, மார்ச் தொடக்கத்தில் New Delhi க்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று Ontario மாகாண அமைச்சரான Victor Fedeli நேற்றைய தினம் தெரிவித்தார்.

கனடாவின் Ontario மாகாணத்தின் பொருளாதார அபிவிருத்தி, வேலை வாய்ப்பு உருவாக்கம் மற்றும் வர்த்தக அமைச்சரான Fedeli கூறுகையில், பிரதமர் Carney அநேகமாக March 1 முதல் 2 வரை இந்தியாவில் இருப்பார் என்று தெரிவித்தார்.

வெற்றிகரமான பேச்சுவார்த்தைகளுக்கு வழிவகுக்கும் வகையில், Ontario உள்ளிட்ட மாகாணங்களிடமிருந்து கனடாவின் மத்திய அரசு ஏற்கனவே கருத்துக்களைப் பெற்றுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த November மாதம் நடைபெற்ற G20 உச்சிமாநாட்டின் போது சந்தித்துக்கொண்ட இரு நாட்டு பிரதமர்களான, பிரதமர் Narendra Modi மற்றும் Carney ஆகியோர் ஒரு வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளைத் ஆரம்பிக்க ஒப்புக்கொண்டனர்.

இதன் மூலம் 2030-ஆம் ஆண்டிற்குள் இருதரப்பு வர்த்தகத்தை 50 பில்லியன் டொலராக அதாவது இரட்டிப்பாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article