5.2 C
Scarborough

‘பில் 19’ புதிய மசோதாவைச் தாக்கல் செய்தார் கியூபெக் சுகாதார அமைச்சர்!

Must read

‘பில் 19’ எனப்படும் புதிய சட்ட மசோதாவைச் கியூபெக் சுகாதார அமைச்சர் சோனியா பெலாஞ்சர் (Sonia Bélanger) தாக்கல் செய்தார்.

கியூபெக் மாகாணத்தில் கடந்த ஓராண்டாக அரசுக்கும் மருத்துவர்களுக்கும் இடையே நிலவி வந்த கடும் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இந்த புதிய சட்ட மசோதா அமைந்துள்ளது.

முன்னதாகக் கொண்டு வரப்பட்ட ‘பில் 2’ சட்டத்தின் மூலம் மருத்துவர்களுக்குக் கட்டாய இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டு, அவற்றை நிறைவேற்றத் தவறினால் அபராதம் விதிக்கப்படும் என அரசு அறிவித்தது.

இதனால் ஆத்திரமடைந்த நூற்றுக்கணக்கான மருத்துவர்கள் கியூபெக் மாகாணத்தை விட்டு வெளியேறத் தொடங்கினர்.

இதனால் ஏற்பட்ட நெருக்கடியைத் தவிர்க்கவே, கியூபெக் அரசு தற்போது மருத்துவர்களின் கோரிக்கைக்குப் பணிந்து புதிய சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article