13.5 C
Scarborough

பிரதமர் கார்னி மீது வலுவான நம்பிக்கை!

Must read

கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னி மீது தற்போது கனடியர்களுக்கு கூடுதல் நம்பிக்கை காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் முதற்கால ஆட்சியிலும், அவரது கடைசி நாட்களிலும் இருந்ததை விட கார்னி மீதான நம்பிக்கை அதிகமாக உள்ளது என புதிய கருத்துக்கணிப்பு ஒன்று வெளிக்காட்டியுள்ளது.

புருப் ஸ்டெடர்ஜீஸ் கன் ட்ரஸ்ட் இன்டெக்ஸ் Proof Strategies CanTrust Index எனப்படும் இந்த வருடாந்த கருத்துக்கணிப்பை, தி டொகிட் குரூப் The Logit Group மே 5 முதல் மே 14 வரை நடத்தியது. இதில் 1,250 கனடியர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

52% கனடியர்கள் மார்க் கார்னி மீது நம்பிக்கை வைத்திருப்பதாக தெரிவித்துள்ளனர். இது கடந்த ஜனவரியில் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு இருந்த 26% நம்பிக்கையைவிட இரட்டிப்பு அளவு நம்பிக்கை கார்னி மீது மக்கள் கொண்டுள்ளனர்.

2016 ஆம் ஆண்டு நடந்த Proof Strategies கருத்துக்கணிப்பில், ட்ரூடோவுக்கு 46% நம்பிக்கை இருந்தமை குறிப்பிடத்தக்கது.

கன்சர்வேட்டிவ் கட்சி தலைவரான பியர் பொய்லிவ் மீது நம்பிக்கை தற்போதும் உயரவில்லை என கணிப்பு தெரிவிக்கிறது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article