5.2 C
Scarborough

பணிநீக்க கால ஊதியப் தொகைக்கான வரியைக் குறைக்க வேண்டும்!

Must read

Ontario வின் Ingersoll பகுதியில் பணிநீக்கம் செய்யப்பட்ட General Motors ஊழியர்களின் பணிநீக்கக் கால ஊதியப் பலன்களுக்கான (Severance packages) வரியைக் குறைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியான Conservative கட்சி, ஆளும் Liberal அரசாங்கத்தை வலியுறுத்தி வருகிறது.

​Conservative கட்சித் தலைவர் Pierre Poilievre, தொழிலாளர் நல விமர்சகர் Kyle Seeback மற்றும் மாகாணசபை உறுப்பினர் Arpan Khanna ஆகியோருடன் இணைந்து ஞாயிற்றுக்கிழமை நிதியமைச்சர் François-Philippe Champagne இற்கு இது தொடர்பில் கடிதம் ஒன்றை எழுதினார். குறித்த கடிதத்தில் வரியிலிருந்து விலக்களிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

General Motors வழங்கும் மொத்த பணிநீக்க ஊதியத்தில் பெரும் பகுதியை வரியாகப் பிடிப்பது, வேலையிழந்த ஊழியர்களுக்கு பல்லாயிரக்கணக்கான டாெலர் இழப்பை ஏற்படுத்தும் என்றும், இது அவர்களின் “புண்ணில் வேலைப் பாய்ச்சுவது” போன்றது என்றும் Conservative கட்சியினர் வாதிடுகின்றனர்.

இதனிடையே, General Motors ஊழியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் Unifor தொழிற்சங்கம், அமெரிக்க அதிபர் Donald Trump, Ontario வின் வாகனத் துறையைச் சீர்குலைப்பதாகவும், Ingersoll ஆலைக்கு பல முனைத் தாக்குதல்களைத் தொடுப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்கா அல்லாத ஏனைய நாடுகளின் வாகன உதிரிபாகங்களுக்கு 25 சதவீத இறக்குமதி வரியை Trump அறிமுகப்படுத்தியதும், அமெரிக்க மின்சார வாகன தொழில்துறையைத் தலைகீழாக மாற்றிய அவரது கொள்கைகளுமே இதற்குக் காரணம் என்று தொழிற்சங்கம் கூறுகிறது.

CUSMA ஒப்பந்தம் மீளாய்வுக்கு வரும் நிலையில், இந்த ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பது குறித்த பேச்சுவார்த்தைகளில் கனடா இந்த ஆண்டு ஈடுபட உள்ளது.

​அனைத்து இறக்குமதி வரிகளையும் நீக்குவதே தனது நோக்கம் என்று Carney வியாழக்கிழமை தெரிவித்தார். ஆனால் அது Trump இன் நோக்கம் அல்ல என்பது தெளிவாகத் தெரிவதால், கனடா அனைத்துச் சாத்தியக்கூறுகளுக்கும் தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article