8.5 C
Scarborough

டொராண்டோ வழக்கறிஞரின் நெகிழ்ச்சி செயல்!

Must read

டொராண்டோவைச் சேர்ந்த பிரபல வழக்கறிஞரான Brian Reeve, தனக்கு மறுவாழ்வு அளித்த Sunnybrook மருத்துவமனைக்கு 10 மில்லியன் டொலர்களை (சுமார் ரூ. 83 கோடிக்கும் அதிகமான தொகையினை) நன்கொடையாக வழங்கியுள்ளார்.

2019-ஆம் ஆண்டு தீவிரமான ‘அப்சஸிவ் கம்பல்சிவ் டிஸார்டர்’ (OCD) எனும் மனநல பாதிப்புக்கு உள்ளான Brian Reeve, Sunnybrook மருத்துவமனையில் நான்கு மாதங்கள் தங்கி சிகிச்சை பெற்றிருந்தார்.

இந்த சிகிச்சை தனது வாழ்க்கையையே மாற்றி அமைத்ததாக (Life Reset) அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்!

கனடாவில் சுமார் 400,000 பேர் OCD பாதிப்புடன் வாழ்கின்றனர். இவர்களின் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சிக்காக இந்தத் தொகை பயன்படுத்தப்படும் கூறப்படுகிறது.

இவரின் நன்கொடையினை கொண்டு Sunnybrook-இன் Bayview வளாகத்தில் ஒரு நிரந்தர சிகிச்சை மையம் உருவாக்கப்பட்டு அதற்கு, கௌர  அடிப்படையில் ‘Reeve OCD Centre’ எனப் பெயரிடப்படவுள்ளது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article