கனடிய சுகாதார தகவல் நிறுவனம் (CIHI) வெளியிட்டுள்ள புதிய தரவுகளின்படி, கடந்த ஆண்டில் கனடா முழுவதும் நிமோனியா (Pneumonia) காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மூன்றில் ஒரு பங்காக அதிகரித்துள்ளதென கூறுகிறது.
அதன்படி, சிறுவர்களிடையே நிமோனியா பாதிப்பு முந்தைய ஆண்டை விட இரண்டு மடங்குக்கு அதிகரித்திருக்கும் அதேவேளை சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவது 143% ஆக அதிகரித்திருப்பதாகவும் CIHI நிறுவனத்தின் தரவுகள் கூறுகின்றன.
கடந்த ஆண்டு ஏற்பட்ட கடுமையான இன்ப்ளூயன்ஸா (Flu) காய்ச்சல் மற்றும் ‘வாக்கிங் நிமோனியா’ (Walking Pneumonia) எனப்படும் ஒரு வகை பாக்டீரியா தொற்று தான் இந்த அதிகரிப்புக்கு முக்கிய காரணம் என்றும் கூறப்படுகிறது.
மொன்றியாலில் உள்ள சிறுவர் வைத்தியசாலையின் தொற்றுநோய் நிபுணர் டாக்டர் ஜெஸ்ஸி பாப்பன்பர்க் (Dr. Jesse Papenburg) கூறுகையில், வைரஸ் காய்ச்சல் சுவாசப்பாதையை பாதிப்பதன் மூலம் பாக்டீரியாக்கள் இலகுவாக நுரையீரலுக்குள் நுழைய வழிவகுப்பதாகத் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசிகளை முறையாகப் பெற்றுக்கொள்வதன் மூலம் நிமோனியாவின் தீவிரத் தன்மையிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க முடியும் என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.

