கனடாவின் முன்னாள் ஒலிம்பிக் பனிச்சறுக்கு வீரரான Ryan Wedding, மெக்சிகோவில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் மீது அதிர்ச்சியூட்டும் புதிய குற்றச்சாட்டுகளை அமெரிக்க வழக்கறிஞர்கள் முன்வைத்துள்ளனர்.
அதன்படி அவர், ஒரு காலத்தில் Pablo Escobar உடன் தொடர்புடைய கொலம்பிய குற்ற கும்பலான ‘Oficina de Envigado’ ஐப் பயன்படுத்தி, கனடாவிலுள்ள சிலரின் அழைபேசிகளை கண்காணித்த்தோடு, சாட்சிகளைக் கடத்தி சித்திரவதை செய்யவும் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக, Jonathan Acebedo-Garcia என்ற சாட்சியைக் கொலை செய்ய சுமார் $5 மில்லியன் அமெரிக்க டொலர்களை வெகுமதியாக அறிவித்து, அவரை கொலம்பியாவில் வைத்துச் சுட்டுக்கொன்றதாகப் புதிய ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
Deepak Paradkar என்ற சட்டத்தரணி உட்பட 8 கனேடியர்கள் இந்த வலையமைப்பில் தொடர்புப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுகிறது.
கனடா மற்றும் மெக்சிகோவில் பலரின் அழைபேசிகளை உளவு பார்க்க அதிநவீன மென்பொருட்களை (Spyware) இவர் பயன்படுத்தியதும் அம்பலமாகியுள்ளது.
ஆண்டுக்கு 60 டன் கோகேயன் கடத்தல் மற்றும் பல கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய இவரை, “நவீன காலத்து எல் சாப்போ (El Chapo)” என FBI (Federal Bureau of Investigation) வர்ணித்துள்ளது.

