7.4 C
Scarborough

கனடிய ஒலிம்பிக் வீரர்களை உற்சாகப்படுத்தும் குளிர்கால ஒலிம்பிக்ஸ்

Must read

கனடிய ஒலிம்பிக் வீரர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில் நடத்தப்படும் Team Canada FanFest நிகழ்ச்சி இந்த வார இறுதியில் டொரோண்டோவின் Nathan Phillips Square-இல் நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் ஒலிம்பிக் வீரர்களுடன் ஸ்கேட்டிங் செய்யவும், மிலான்–கோர்டினா குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டிகளை நேரலையாக காணவும் வாய்ப்பு உள்ளது.

இந்த நிகழ்வில் பிரபல ஒலிம்பிக் வீரர்கள் எல்விஸ் ஸ்டோஜ்கோ, டிலன் மாஸ்கோவிட்ச், காலின் இர்வின், ஜெசிக்கா டூடோஸ் ஆகியோரை சந்திக்கும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது. 2024 பாரிஸ் ஒலிம்பிக்ஸுக்காக தொடங்கப்பட்ட இந்த FanFest, கனடாவில் ஒலிம்பிக் உற்சாகத்தை வளர்க்க மீண்டும் நடத்தப்படுகிறது.

டொரோண்டோக்கு பின் இந்த நிகழ்ச்சி கால்கரி, வான்கூவர், மொன்ட்ரியல் நகரங்களுக்கு செல்ல உள்ளது. மிலான்–கோர்டினா குளிர்கால ஒலிம்பிக்ஸ் நேற்று இத்தாலியின் கலை மற்றும் பண்பாட்டை வெளிப்படுத்தும் விழாவுடன் தொடங்கியது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article