கனடாவின் சஸ்கடூன் (Saskatoon) நகரைச் சேர்ந்த நபர் ஓருவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட அன்றைய தினமே மீண்டும் கைதான சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் காதலர் தினமாக பெப்ரவரி 14 ஆம் திகதியன்று பதிவாகியுள்ளதுடன், கைல் ரொனால்ட் ஹேமலக் (Kyle Ronald Hameluck) என்பரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் ஒளிந்துப் பார்த்தல் போன்ற தகாத செயல்கள் மற்றும் இரவு நேரத்தில் சட்டவிரோத நுழைவு உட்பட 70 குற்றங்களுக்கு குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டவர்.
அவர் மீண்டும் குற்றச்செயலில் ஈடுபடக்கூடும் என்ற அச்சத்தால், விடுதலையற்கு முன்பே பொது எச்சரிக்கை வெளியிட்டிருந்த சஸ்கடூன் (Saskatoon) பொலிஸார், விடுதலை விடுமுறைகளை மீறியதால் அவரை மீண்டும் கைது செய்ததாக கூறுகின்றனர்.
இவருக்கு முன்னதாக 2 வருடம் 10 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த தண்டனை நிறைவுறுவதற்கு ஏழு மாதங்கள் மட்டுமே மீதமிருக்கும் நிலையில் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிஸார் கூறுகின்றனர்.

