8.5 C
Scarborough

கனடாவில் நிரந்தரமாக குடியேறுபவர்களுக்கான நடைமுறைகளில் புதிய மாற்றங்கள்!

Must read

கனடாவின் குடியேற்றத் துறை அமைச்சர் Lena Diab, அந்நாட்டின் ‘Express Entry’ திட்டத்தில் இராணுவத் துறையைச் சார்ந்தவர்கள் உட்பட பல்வேறு தொழில்களை உள்ளடக்கிய மூன்று புதிய நிரந்தரக் குடியிருப்பு வழிகளை அறிமுகப்படுத்துகிறார்.

​கனடாவில் பணி அனுபவம் கொண்ட ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சிரேஷ்ட முகாமையாளர்களுக்கும் இந்த புதிய வழிமுறைகள் ஏற்புடையது. நாட்டின் சிறந்த திறமையாளர்களை ஈர்ப்பதற்கான அரசாங்கத்தின் உத்தியின் ஒரு பகுதியாக இது இருக்கும் என்று Diab குறிப்பிடுகிறார்.

கனேடிய நிறுவனங்களுக்கு ஆராய்ச்சியாளர்களை ஈர்ப்பதற்காக அரசாங்கம் வகுத்துள்ள $1.7 பில்லியன் மதிப்பிலான உத்திக்கு வலுசேர்க்கும் வகையில் இந்த புதிய வழிமுறைகள் அமைந்துள்ளன.

இந்தத் துறைகளை மிக முக்கியமான தேவைகளைக் கொண்ட பகுதிகளாக நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். இவற்றை வலுப்படுத்துவது, நாடு முழுவதும் உள்ள புதிய சந்தைகளுக்குப் பொருட்களைக் கொண்டு செல்ல உதவுகிறது. மேலும் இது வர்த்தகம், விநியோகச் சங்கிலி மற்றும் பொருளாதார மீள்திறனுக்கும் உதவுகிறது, என்று தனது உரையின் போது Diab கூறினார்.

கனேடிய ஆயுதப் படையில் மருத்துவர்கள், தாதியர்கள் மற்றும் விமானிகளாகப் பணியாற்றுவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வெளிநாட்டு இராணுவ விண்ணப்பதாரர்களுக்கென புதிய ‘Express Entry’ வழிமுறையையும் Ottawa அறிமுகப்படுத்துகிறது.

மத்திய வரவுசெலவுத்திட்டத்தில் அறிவிக்கப்பட்ட, கடந்த மூன்று ஆண்டுகளில் குறைந்தது ஒரு வருட கனேடிய அனுபவம் கொண்ட வெளிநாட்டு மருத்துவர்களுக்கான திட்டத்துடன் இந்த புதிய வழிமுறைகள் மேலதிகமாக சேர்க்கப்பட்டுள்ளன.

​தாதியர்கள், பல் மருத்துவர்கள், மருந்தாளர்கள், தச்சுத்தொழிலாளர்கள் மற்றும் ஏனைய கைவினைத் தொழில்களில் ஈடுபட்டுள்ளோருக்கான தற்போதைய ‘Express Entry’ பிரிவுகளுடன் இந்த புதிய வழிமுறைகளும் இணைக்கப்படுகின்றன.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article