19.6 C
Scarborough

கனடாவில் தகாத செயலில் ஈடுபட்ட அதிபருக்கு தண்டனை

Must read

கனடாவில் பாடசாலை ஒன்றின் அதிபர் தகாத செயலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் தண்டிக்கப்பட்டுள்ளார்.

கனடாவில் ஒன்றாரியோ மாகாணம் ஹாலிபெக்ஸில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றின் அதிபருக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த பாடசாலை அதிபருக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பாலர் பாடசாலை ஒன்றின் அதிபர் பதின்ம வயது சிறுமியரை துஷ்பிரயோகம் செய்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இணைய வழியில் குறித்த அதிபர், சிறுமிகளை துப்பியோகம் செய்தார் எனவும் ஆபாச காணொளிகளை பகிர்ந்தார் எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பாலியல் தூண்டல்களை மேற்கொண்டார் என இந்த பாடசாலை அதிபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் குறித்த பாடசாலை அதிபருக்கு நீதிமன்றம் நான்கு ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. பிலிப்ஸ் கலஸ்கி என்ற பாடசாலை அதிபரே இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளார்.

13 மற்றும் 14 வயதான சிறுமியர் இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மோசமான படங்கள், காணொளிகளை இந்த நபர் சிறுமியருடன் பகிர்ந்து கொண்டார் எனவும் தேவையற்ற பாலியல் தூண்டல்களையும் மேற்கொண்டார் எனவும் குற்றம் சுமத்தி வழக்கு தொடரப்பட்டிருந்தது.

கடந்த 2023ம் ஆண்டு இந்த சம்பவம் இடம்பெற்று இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article