10.4 C
Scarborough

உறைபனியில் தவிக்கும் வீடற்றவர்களுக்கு உதவும் டொராண்டோ ஆசிரியை: ‘Care4Care’ திட்டம் மூலம் நெகிழ்ச்சி – மேயர் பாராட்டு!

Must read

டொராண்டோ (Toronto) நகரில் நிலவிவரும் கடும் உறைபனிக்கு மத்தியில், வீடற்ற மக்களுக்கு உதவும் நோக்கில் ‘கேர் 4 கேர்’ (Care4Care) எனும் திட்டத்தை கத்ரீனா கெய்ன்-கிரிஃபின் (Katrina Cain-Griffin) என்ற 25 வயது ஆசிரியை முன்னெடுத்துள்ளார்.

சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு டொராண்டோவில் பதிவான மிகக் கடுமையான குளிர்காலத்தை எதிர்கொள்ளும் வகையில், வீதிகளில் வசிப்போருக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை உள்ளடக்கிய பொதிகளை அவர் வழங்கி வருகின்றார்.

சாக்ஸ், கையுறைகள், பல் துலக்கி மற்றும் வாசலின் உள்ளிட்ட 9 முக்கிய பொருட்கள் அடங்கிய ஒவ்வொரு பொதியும் சுமார் 20 டாலர் செலவில் தயாரிக்கப்படுகின்றது.

சுமார் 120 பராமரிப்பு பொதிகளை வழங்க இலக்கு நிர்ணயித்துள்ள கத்ரீனா, இதற்காக 2,550 டாலர் நிதியை திரட்ட முயற்சி செய்து வருகின்றார்.

“எனது மாணவர்களுக்கு மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்று பாடம் நடத்துவதை விட, அதை நானே செய்து முன்மாதிரியாக இருக்க விரும்பினேன்” என்று அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

நகரின் பல பகுதிகளில் வெப்பநிலை மைனஸ் 25 (–25 C) டிகிரியை எட்டியுள்ள நிலையில், கத்ரீனாவின் இந்த முயற்சிக்கு மேயர் ஒலிவியா சௌ (Olivia Chow) அலுவலகம் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article