2.1 C
Scarborough

இன்றைய ராசிபலன் (17.02.2026) : பங்குச் சந்தையில் லாபம் கிடைக்கும்

Must read

மேஷம்

முக்கிய பொறுப்புகளை முடிப்பீர்கள். முகத் தோற்றம் பளிச்சிடும். தாய்வழி உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். பணப்பற்றாக்குறை நீங்கும் பழைய நண்பரை சந்திப்பீர்கள். புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். கலைஞர்களுக்கு சம்பளம் கூடும்.

அதிர்ஷ்ட நிறம் நீலம்

ரிஷபம்

மனஉறுதி உண்டாகும். ஒரு சிலருக்கு இடமாற்றம் ஏற்படும். இளைஞர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். நண்பர்களின் பக்கபலம் உண்டு. சகோதரி வழி உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். அலுவலக வேலைகளை விரைவாக முடிப்பீர்கள். வங்கிப் பணியாளர்கள் நிம்மதியடைவர். உடல் நலம் தேறும்.

அதிர்ஷ்ட நிறம் பச்சை

மிதுனம்

பங்குச் சந்தையில் லாபம் கிடைக்கும். விற்பனைபிரதிநிதிகள் ஆர்டர்கள் பெறுவர். வியாபாரத்தில் லாபம் கிட்டும். அரசியல்வாதிகளுக்கு அலைச்சல் குறையும்.வரவேண்டிய பாக்கிகள் வந்து சேரும். பெண்கள் தலைமை தாங்குவர். ஆரோக்கியம் மேம்படும். மாணவர்களுக்கு கூடுதல் பயிற்சி அவசியம்.

அதிர்ஷ்ட நிறம் ஊதா

கடகம்

தங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் முக்கியமான நபர்களை அதாவது தங்கள் தொழில் சார்ந்தவர்கள் அல்லது நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவுகளிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. காரணம் இன்று தங்கள் சந்திராஷ்டமம் என்பதால் சாதாரணமாக பேசும் வார்த்தைகள் கூட பிரச்சினையைத் தந்து நிரந்தரமாக பேசாமல் போக வாய்ய்புள்ளதால் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம் வெளிர்மஞ்சள்

சிம்மம்

பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உணவு விசயத்தில் கவனம் தேவை. உத்யோகத்தில் மதிக்கப்படுவீர்கள். பொதுநலப்பிரியர்களுக்கு திருப்தி கிடைக்கும். விற்பனை பிரதிநிதிகளுக்கு அலைச்சல்கள் அதிகரிக்கும். புதிய பிரபலங்கள் அறிமுகமாவர். தம்பதிகளிடைலலயே ஒற்றுமை கூடும்.

அதிர்ஷ்ட நிறம் இளஞ்சிவப்பு

கன்னி

குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். வாகனம் ஓட்டும் போது எச்சரிக்கை தேவை. தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். பிள்ளைகளின் புது முயற்சிகளை ஆதரிப்பீர்கள். மாணவர்கள் எழுதிப் பார்ப்பது நல்லது. நட்பால் ஆதாயம் உண்டு. ஆரோக்கியத்தில் பிரச்சினை இல்லை.

அதிர்ஷ்ட நிறம் வெள்ளை

துலாம்

வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பணப் பிரச்சினை இருக்காது. பெண்கள் கைத்தொழிலில் முன்னேற்றம் கிடைக்கும். பிரபலங்கள் உதவுவர். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். மாணவர்களுக்கு நினைவாற்றல் கூடும்.

அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்

விருச்சிகம்

சில்லரை வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். குடும்ப பிரச்சினை முடிவுக்கு வரும். தம்பதிகளிடையே மனஸ்தாபம் நேரலாம், கோபத்தினை தவிர்ப்பது நல்லது. தேகத்தில் பொலிவுக் கூடும். எதிர்பார்த்தது தங்களுக்கு கிடைக்கும். கலைஞர்களுக்கு பெரிய வாய்ப்புகள் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம் சிவப்பு

தனுசு

வெளிநாடு பயணம் உறுதியாகும். சில சமயம் தங்கள் சகோதரர் உதவுவார். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பர். விரும்பியவரை சந்திப்பீர்கள். வழக்கு இழுபறியாகும். திட்டமிடாத செலவுகளை போராடி சமாளிப்பீர்கள். மாணவர்கள் மேல்படிப்பிற்கு திட்டமிடுவர். உத்யோகத்தில் அமைதி நிலவும். உடல் நலம் பலம் பெறும்.

அதிர்ஷ்ட நிறம் கிரே

மகரம்

உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் மாறும். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். பெண்கள் நகைகளில் முதலீடு செய்வர். ஒரு சிலர் புதிய வியாபாரத்தில் முதலீடு செய்வீர்கள். சகோதர வழியில் நன்மை உண்டாகும். வியாபாரிகளிடையே நடக்கும் போட்டியில் வெற்றி பெறுவர். உடல் நலம் மேம்படும்.

அதிர்ஷ்ட நிறம் சிவப்பு

கும்பம்

குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். பிரபலங்களை சந்திக்கும் வாய்ப்பு உண்டு. நட்பால் ஆதாயம் உண்டு. பிள்ளைகளால் ஆறுதலடைவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் விலகும். உத்யோகத்தில் மதிக்கப்படுவீர்கள். எதிரிகள் விலகிப் போவர். உடல்நிலை சரியாகும்.

அதிர்ஷ்ட நிறம் வெள்ளை

மீனம்

உத்யோகஸ்தர்களுக்கு முக்கியத்துவம் மிகும். மனைவி உங்களை புரிந்து கொள்வார். பிள்ளைகள் நன்கு படிப்பர். வியாபாரிகளிடையே இருந்த தொய்வு நீங்கும். சில சமயம் தங்கள் பேச்சில் முதிர்ச்சி தெரியும். வரவுக்கு ஏற்ற செலவுகள் இருக்கும். உயர்அதிகாரியின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். உடன் பிறந்தவர்கள் உதவுவர்.

அதிர்ஷ்ட நிறம் பொன்னிறம்

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article