குஜராத் மாநிலம் போர்பந்தரில் பயிற்சியின் போது, இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான துருவ் ஹெலிகொப்டர் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் மூவர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளனர். இச் சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்பு படையினர், மீட்பு பணி மேற்கொண்டனர். விபத்துக்கான காரணம் குறித்து, கடற்படை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். தொழில்நுட்பம் காரணம் தான் விபத்து ஏற்பட காரணமென முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.