20.3 C
Scarborough

வரலாற்றில் முதல்முறையாக இருவருக்கு சம்பியன் பட்டம்

Must read

அமெரிக்காவில் நடைபெற்ற உலக பிளிட்ஸ் செஸ் சம்பியன்ஷிப்பில் முதல்முறையாக இருவர் சம்பியன் பட்டம் பெற்றுள்ளனர்.

போட்டியின் முக்கிய கட்டமான நொக்அவுட் சுற்றில் வென்ற ரஷ்யாவின் இயன் நெபோம்னியச்சி, நோர்வேயின் கார்ல்சென் இருவரும் இறுதிச் சுற்றில் பங்கேற்றனர். இறுதிச் சுற்றில் இருவரும் 3.5 புள்ளிகள் பெற்றிருந்த நிலையில் சமனில் முடித்து சம்பியன்ஷிப்பை பகிர்ந்துகொள்ள ஒப்புக்கொண்டனர். வரலாற்றில் முதல்முறையாக இருவர் சிங்கிள் சம்பியன்ஷிப்பை பகிர்ந்துகொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுவரை கார்ல்சென் 07 முறை பிளிட்ஜ் செஸ் கிண்ணத்தை வென்றிருந்த நிலையில் தற்போது 8ஆவது முறையாக வென்றிருக்கிறார். ரஷ்யாவின் இயன் நெபோம்னியச்சி முதல் முறையாக பிளிட்ஸ் செஸ் கிண்ணத்தை வென்றுள்ளார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article