16.8 C
Scarborough

லொஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீ: 10 பேர் பலி

Must read

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காட்டுத்தீ வேகமாகப் பரவி வருகிறது. லொஸ் ஏஞ்சல்ஸ் நகரின் கடற்கரைப்  பகுதியில் உள்ள வனப்பகுதியில் பரவத்தொடங்கிய காட்டுத்தீ  பலத்த காற்று  காரணமாக  நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் வேகமாக பரவி வருகிறது

இந்நிலையில், நகரில் வேகமாக பரவி வரும் காட்டுத்தீயில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 50திற்க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். காட்டுத்தீ காரணமாக சுமார் 1 இலட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்குச்  செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் இந்தக்  காட்டுத்தீயால் குறைந்தது 10,000திற்க்கும் அதிகமான வீடுகள், கட்டிடங்கள்  எரிந்துள்ளதோடு  சுமார் 10 ஆயிரம் ஹெக்டேயர் நிலப்பரப்பு முற்றிலும் நாசமாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தத்  தீயணைப்பு படையினர் மற்றும் மீட்புக்குழுவினர் தீவிர நடவடிக்கைகளை  எடுத்து வருகின்றனர்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article