அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப்பின் உருவத்தை புத்தர் போல உருவாக்கியுள்ளார் சீனாவைச் சேர்ந்த பீங்கான் உருவ வடிவமைப்பாளர்.
ஜனவரி 20ம் திகதி அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்கவுள்ள நிலையில், சீனாவைச் சேர்ந்த பீங்கான் உருவ வடிவமைப்பாளரும் சிற்பியுமான ஹாங் ஜின்ஷி புத்தர் வடிவிலான ட்ரம்ப் சிலைகளை வடிவமைத்துள்ளார்.
சீனக் கைவினைக் கலைஞர் ஹாங் ஜின்ஷியின் சிலைகள், 140 டொலர்கள் – 2,700 டொலர்கள் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.
999 முதல் 20,000 யுவான்களுக்கு (சுமார் 11,000 ரூபா முதல் 2.30 இலட்சம் ரூபா வரை) அவற்றின் அளவைப் பொறுத்து விலை நிர்ணயம் செய்துள்ளார் ஹாங் ஜின்ஷி. இந்த சிலைகள் அமேசான் மற்றும் சீன இணையதள விற்பனை நிறுவனமான டெழுவில் விற்பனைக்கு உள்ளன.