7.3 C
Scarborough

பாகிஸ்தான் மசூதி தாக்குதல் – ISIS பெறுப்பேற்பு!

Must read

பாகிஸ்தானில் சமீப காலமாக பயங்கரவாத தாக்குதல் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக தெஹ்ரீக்-இ-தலீபான் அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் உள்பட பல்வேறு நகரங்களில் அடிக்கடி தாக்குதல் நடத்தி பெரும் சேதங் களை விளைவித்து வருகின்றனர்.

அந்தவகையில் நேற்றும் தலைநகரில் பெரும் தாக்குதல் ஒன்று அரங்கேற்றப்பட்டது. அங்குள்ள தர்லாய் பகுதியில் ஷியா பிரிவு முஸ்லிம்களின் மசூதி ஒன்று உள்ளது. இங்கு நேற்று வெள்ளிக்கிழமை தொகை நடந்து கொண்டிருந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்றிருந்தனர்.

அப்போது உடலில் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு ஒருவர் மசூதிக்கு வந்தார். அவரை வாசலில் தடுத்து நிறுத்தினர். அப்போது அவர் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டு களை வெடிக்கச்செய்தார்.

உடனே பலத்த சத்தத்துடன் அந்த குண்டுகள் வெடித்துச்சிதறின. இதில் மசூதியில் தொழுகைக்கு வந்திருந்த பலர் தூக்கி வீசப்பட்டனர். அதில் பலரும் உடல் சிதறி சம்பவ இடத்தி லேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் 31 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 169 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்தநிலையில், இஸ்லாமாபாத் மசூதியில் நடந்த தற்கொலை படை தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article