10.4 C
Scarborough

நாய்கள் துரத்தியதால் 40 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுமி பத்திரமாக மீட்பு!

Must read

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் ஃபரூக்காபாத் மாவட்டத்தின் கைம்கஞ்ச் பகுதியில் சிறுமி சுமார் 40 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சிறுமிபள்ளியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது அவரை தெரு நாய்கள் துரத்தியுள்ளன.

இதனால் பயந்து ஓடிய அவர், சுமார் 40 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தாகவும் இதைக்கண்ட கிராம மக்கள் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த  பொலிஸார் மற்றும் மீட்புக் குழுவினர் மிகவும் திறமையாக செயல்பட்டு சிறுமியை பாதுகாப்பாக மீட்டகப்பட்டதாக  இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்த வீடியோ, சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article