14.6 C
Scarborough

சர்வதேச நீதிமன்றத்திலிருந்து ஹங்கேரி வெளியேறத்தீர்மானம்

Must read

ஹங்கேரி நாட்டுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சென்றுள்ள நிலையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலிருந்து அந்நாடு வெளியேறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஸா மீதான இஸ்ரேலின் போரில் ஏராளமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது.

இருப்பினும், பிரதமர் நெதன்யாகு ஹங்கேரியின் தீவிர வலதுசாரி பிரதமரான விக்டோர் ஓர்பனின் அழைப்பை ஏற்று அந்நாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலிருந்து ஹங்கேரி நாடு வெளியேறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிரதமர் ஓர்பனின் தலைமைச் செயலாளரான ஜெர்ஜெலி குல்யாஸ் கூறுகையில்,

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலிருந்து வெளியேறுவதற்கான நடவடிக்கைகளை அரசியலமைப்பிற்கும் சர்வதேச சட்டமுறைகளுக்கும் உட்பட்டு ஹங்கேரி அரசு மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக,உலக அளவிலான போர் குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகளை விசாரிக்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையினடிப்படையில் அந்நபர் அதன் உறுப்பு நாடுகளில் கால் வைத்தால் அவரை கைது செய்து நீதிமன்றத்திடம் ஒப்படைக்க வேண்டும்.

ஆனால், பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டபோது அவரது நெருங்கிய கூட்டாளியான ஹங்கேரி பிரதமர் ஓர்பன் கடுமையாக விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article