பாபி சிம்ஹா, ஹெபா படேல் நாயகன் – நாயகியாக நடிக்கும் திரைப்படம் தமிழ், தெலுங்கில் உருவாகிறது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்துக்கு ஜே.கிருஷ்ணா தாஸ் ஒளிப்பதிவு செய்கிறார்.
சித்தார்த் சதாசிவுனி இசையமைக்கிறார். யுவா புரொடக் ஷன்ஸ் சார்பில் யுவா கிருஷ்ணா தொலாட்டி தயாரிக்கும் இப்படத்தை மெஹர் யாரமாட்டி இயக்குகிறார். தணிகலபரணி, சூர்யா ஸ்ரீனிவாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இதன் பூஜை சமீபத்தில் நடைபெற்றது.

