15.4 C
Scarborough

ஈரான் மீதான தாக்குதல் குறித்து பரிசீலிக்கப்படும்!ட்ரம்ப்

Must read

ஈரான் மீது மீண்டும் குண்டுவீச்சு நடத்துவது குறித்து “முற்றிலும்” பரிசீலிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.

சர்வதேச ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் ஈரான் யுரேனியத்தை செறிவூட்டும் செயற்பாடுகளில் ஈடுவதாக உளவுத்துறை தீர்மானித்தால் “கேள்விக்கு இடமின்றி” அந்நாடு தாக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வார இறுதியில் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதலில் அமெரிக்கா நேரடியாக ஈடுபட்டது, விரைவாக போர் நிறுத்தத்தை நாடும் நோக்கில் அமெரிக்கா ஈரானின் அணுசக்தி தளங்களை தாக்கியது.

இதேநேரம் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, தாக்குதல்கள் குறிப்பிடத்தக்க எதையும் சாதிக்கவில்லை என்று கூறினார், ஆனால் கடந்த வெள்ளிக்கிழமை ட்ரம்ப் ஈரானின் அணுசக்தி தளங்கள் “அழிக்கப்பட்டுவிட்டன” என்ற தனது கருத்தை மீண்டும் தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை பின்னர் தனது சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில் பதிவிட்ட டிரம்ப், ஆயத்துல்லா எங்கு தங்கியிருந்தார் என்பது தனக்குத் தெரியும் என்றும், இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க ஆயுதப்படைகள் அவரை குறிவைப்பதைத் தானே தடுத்ததாகவும் கூறியுள்ளார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article