மேஷம்
உத்யோகஸ்தர்களுக்கு சக ஊழியர்கள் பாராட்டுவர். வேலை தேடுபவர்களுக்கு புது உத்யோக வாய்ப்பு வரும். வியாபாரிகளின் தங்கள் தொழிலுக்கு ஏற்ப வங்கிக் கடன் கிட்டும். மளிகைக் கடை மற்றும் சில்லரை வியாபாரம் லாபம் தரும். மாணவர்களுக்கு நினைவாற்றல் அதிகரிக்கும். தம்பதிகளிடையே அன்பு பலப்படும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
ரிஷபம்
நண்பர்களின் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வது நல்லது. உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் இருந்து வந்த மோதல்கள் விலகும். அலுவலகத்தில் நிம்மதி உண்டாகும். வீட்டில் வேலையாட்களின் கோபத்தினை காட்டாமல் தட்டிக் கொடுப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்
மிதுனம்
வியாபாரிகளுக்கு லாபம் கூடும். வெளிநாட்டுப் பயணம் பயன் தரும். அரசாங்க வகைகளில் அனுகூலம் உண்டாகும். எதிரிகளின் தொல்லைகள் அகலும். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் குவியும். நிர்வாகத் திறமையால் பதவி உயரும். மாணவர்கள் பிடித்த துறையை தேர்ந்தெடுப்பர்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
கடகம்
பெண்களுக்கு மதிப்பு கூடும். குடும்பத்தில் தங்கள் பேச்சுக்கு மரியாதை கிடைக்கும். தம்பதிகளிடையே அன்பு பலப்படும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மிகும். அரசியல்வாதிகள் சுதந்திரமாகச் செயல்படுவர். வெளிநாட்டவர் மற்றும் வேற்றுமொழிக்காரர்களால் ஆதாயம் உண்டு.
அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்
சிம்மம்
மார்கெட்டிங் பிரிவினர்களுக்கு கூடுதல் அலைச்சல் உண்டு. தம்பதிகளிடையே அன்பு பெருகும். புதிய ஏஜென்சி எடுப்பீர்கள். விவசாயிகளின் பொருட்களுக்கு விலை ஏற்றம் உண்டு. பயணங்களின் போது தலைகவசம் அணியவும் மற்றும் செல்போன் பேச வேண்டாம். உடல் நலம் நன்கு மேம்படும்.
அதிர்ஷ்ட நிறம்: கரும் பச்சை
கன்னி
பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். திருமணமாகாதவர்களுக்கு நல்ல ஒரு துணை அமையும். மனைவிவழியில் உதவிகள் உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். அதிக விற்பனைக்காக வியாபாரத்தை துவங்க புது இடத்தை தேர்வு செய்வீர்கள். தொலைந்து போன பொருள் மீண்டும் வந்தடையும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
துலாம்
இளைஞர்களுக்கு வேலை தேடுபவர்களுக்கு நேர்முக தேர்வில் வெற்றிப் பெறுவர். எதிர்பார்த்தவாரே தங்களுக்கு துணை கிடைக்கும். பெண் அரசியல்வாதிகளுக்கு புகழ், கௌரவம் உயரும். வெளியூர் பயணம் நேரிடும். வியாபாரத்தில் ஆதாயம் காணலாம். வாடிக்கையாளர்களிடம் ஆவேசமாக பேச வேண்டாம்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
விருச்சிகம்
கடவுள் நம்பிக்கை அதிகரிக்கும். வெளியூர் செல்வதில் திட்டங்கள் மாறும். வியாபாரம் லாபகரமாக செல்லும். வெளிநாட்டுத் தொடர்பால் நன்மைகள் கூடும். உத்யோகஸ்தர்கள் அதிகாரிகளிடம் பாராட்டைப் பெறுவர். உடல் நலம் பளிச்சிடும். வாகனத்தில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
தனுசு
பெண்கள் கணவனிடம் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. உடல் நலம் தேறும். நட்பு வட்டம் விரிவடையும். உத்யோகஸ்தர்களுக்கு வேலைச்சுமை இருந்து கொண்டேயிருக்கும். பிள்ளைகள் தங்கள் சொல்படி நடப்பர். பெண்கள் கணவர் வீட்டாரிடம் இணக்கமாக செல்வது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: வான் நீலம்
மகரம்
குடும்பத்துடன் வெளியூர் பயணம் நடக்கும். அது தங்களுக்கு மகிழ்ச்சி தரும். பிள்ளைகள் நீண்ட நாள் கேட்டுக் கொண்டிருந்த எலக்ட்ரானிக் பொருட்களை வாங்கித் தருவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அக்கறைத் தேவை. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். தம்பதியரிடையே அன்பு மேலோங்கும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
கும்பம்
இன்று மனக்குழப்பம் நிறைந்த நாளாக மூல நட்சத்திரக்காரர்களுக்கு இருக்கும். காரணம் தங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் முக்கியமான நபர்களை தவிர்ப்பது நல்லது. சுபகாரியங்களை தள்ளி வைப்பது நல்லது. இன்று இறைவனை வேண்டுவது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
மீனம்
அரசு தொடர்பானவைகளில் லாபம் உண்டு. கூட்டுத்தொழிலில் வியாபாரத்தில் நல்லதொரு தொகை கிடைக்கும். தம்பதிகள் தங்கள் தவறை உணர்வர். கலைஞர்களுக்கு பாராட்டுக்ள் குவியும். ரியல் எஸ்டேட் தொழில் செய்பவருக்கு நிலம் மற்றும் மனையால் லாபம் வரும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்

