16.1 C
Scarborough

அம்புலன்ஸ் வண்டி விபத்து – ஒருவர் காயம்

Must read

திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியின் மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள பாலத்தோப்பூர் பகுதியில் அம்பியுலான் வாகனமும், கெப் வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் அம்புலான் வண்டி வாய்க்காலுக்குள் புரண்டு வீழ்ந்துள்ளது.

இதில் அம்புலன்ஸ் வண்டியில் வந்த இருவர்  காயமடைந்துள்ளார்.

இன்று செவ்வாய்கிழமை (21) பகல் இடம்பெற்ற இவ் விபத்துச் சம்பவத்தில் கிளிவெட்டி பிரதேச வைத்தியசாலையின் அம்புலான்ஸ் வண்டி சாரதி மற்றும் வைத்தியசாலை ஊழியரும் படுகாயமடைந்து கிளிவெட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மூதூர் தள வைத்தியசாலையில் நோயாளிகளை விட்டுவிட்டு கிளிவெட்டி பிரதேச வைத்தியசாலையை நோக்கி வரும் வழியிலேயே இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article